விஷவாயு செலுத்தி மொத்த குடும்பத்தையும் கொன்ற கொடூர தந்தை: வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் விஷவாயு செலுத்தி இரண்டு பிஞ்சு குழந்தைகள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொன்ற சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் 44 வயதான பெர்னாண்டோ மன்ரிக்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அல்டோபர் மாதம் இவரது மனைவி மரியா லூட்ஸ், பிள்ளைகள் எலிசா மற்றும் மார்ட்டின் என நால்வரும் பரிதாபமாக இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் மன்ரிக் என்பவரே தமது மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு தப்பிக்க திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.

சம்பவத்தன்று மரியாவின் தோழி ஒருவரே, மொத்த குடும்பமும் சடலமாக கிடப்பது தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மன்ரிக் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததும், தனது தொழில் நிமித்தம் அடிக்கடி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

மட்டுமின்றி, தமது திருமண வாழ்க்கை சிக்கலில் இருப்பதாகவும், தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவருடன் பாலியல் தொடர்பான நெருக்கத்தில் இருப்பதாகவும் தமது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதனிடையே பிலிப்பைன்ஸ் பெண் தொடர்பில் சிட்னி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த 17 வயது பெண்ணுக்கு மன்ரிக் பல ஆயிரம் டொலர்கள் அளித்துள்ளதும், அவருடன் உறவில் இருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் மன்ரிக் உறவில் இருப்பது மரியாவுக்கு தெரியவர, இவர்களின் திருமண வாழ்க்கை மேலும் சிக்கலில் ஆழ்ந்துள்ளது.

இதன் காரணமாகவே மன்ரிக் தமது மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்துவிட்டு பிலிப்பைன்ஸ் தப்பிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி விஷவாயு செலுத்தி, மொத்த குடும்பத்தையும் கொல்ல திட்டமிட்டதில், அவரும் சிக்கியுள்ளார்.

மன்ரிக் குடும்பம் மட்டுமின்றி அவர்களது செல்ல நாயும் இதில் சிக்கி உயிரை விட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்துள்ள நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்