வடகொரியாவால் கட்டாய படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய மாணவர்...! வெடித்தது சர்ச்சை

Report Print Abisha in அவுஸ்திரேலியா

வடகொரியாவால் குற்றங்கள் ஒப்பு கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய மாணவர் Alek Sigley தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Alek Sigley வடகொரியாவில் நவீன கொரிய இலக்கியம் பயின்று வந்தார். கடந்த 2019 ஆண்டு ஜூன் மாதம் திடீரென காணாமல் போன அவர் குறித்து அவுஸ்திரேலியா குரல் கொடுத்தது.

இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பின் Alek வடகொரியாவின் பிடியில் உள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

அவுஸ்திரேலியாவிற்கு வடகொரியாவில் வெளியுறவு பிரதி நிதித்துவம் இல்லை என்பதால், ஸ்வீடனின் உதவியை நாடியது. ஸ்வீடன் தூதர் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அதன்பின் 9 நாட்கள் சிறையில் இருந்த Alek விடுவிக்கப்பட்டார். உண்மையில், வடகொரியாவால் கைது செய்யப்பட்டு குறுகிய காலத்தில் ஒருவரை விடுதலை செய்துவது அதுவே முதல் முறையாகும்.

Alek Sigley

Alek விடுதலை செய்ததும், வடகொரிய ஊடகங்கள், அவர் அரசை உளவு பார்த்தார். அதை அவர் ஒப்புக்கொண்டார். வடகொரியாவின் இறையாண்மை மீறினார் என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்டன.

விடுதலைக்கு பின் தனது டிவிட்டர் பக்கத்தில், “என் இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்திருக்கும் பியோக்கியாங்கின் தெருக்களில் இனி ஒருபோதும் நான் நடக்கப்போவதில்லை. எனது நெருங்கிய நண்பர்களையும் ஆசிரியர்களையும் ஒருபோது சந்திக்கப்போவதில்லை. ஆனால், இது தானே வாழ்க்கை” என்று வருத்தத்துடன் பதிவிட்டார்.

அவருக்கு வடகொரியாவில் நுழை தடைவிதிக்கப்பட்டைதை சுட்டி காட்டியிருந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் Alek தென்கொரிய வாராந்திர கல்வி இதழுக்கு போட்டி ஒன்று வழங்கியுள்ளார். அதில் “ஒன்பது நாள் விசாரணையின் போது அவர்கள் கூறும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். வெளி உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் நான் குற்றவாளி அல்ல. அதிகாரிகள் என் மீது பொய்யாக குற்றம்சாட்டினர்.

அவர்கள் எனக்கு பாடம் கற்பிக்க எண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். எனெனில், தொடர்ந்து என்னை மன்னிப்புக் கடிதங்களை எழுதும்படி வற்புறுத்தினர். ஆனால், உடல் ரீதியாக என்னை துன்புறுத்தவில்லை. நான் கைது செய்யப்பட்டது என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது” என்று எழுதியுள்ளார்.

Alek-ன் இந்த கட்டுரை வடகொரியாவை மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. வடகொரியா மீது தொடர்ந்து விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்