அவுஸ்திரேலியாவில் Vegan ஆதரவாளர்களை வழிமறித்த இரண்டு பேர் செய்த வெறுப்பூட்டும் செயல்!

Report Print Ragavan Ragavan in அவுஸ்திரேலியா
0Shares

அவுஸ்திரேலியாவில் Vegan ஆதரவாளர்களை வழிமறித்து வெறுப்பேற்றும் பவிதமாக இரண்டு இளைஞர்கள் செய்த செயல் கடும் எதிர்ப்புகளை பெற்றுவருகிறது.

பால் சம்மந்தப்பட்ட உணவுகள் உட்பட விலங்குகள் தொடர்பாக எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாதவர்கள் Vegan என அழைக்கப்படடுகின்றனர்.

அவர்கள் மிருக விதைப்புக்கு முற்றிலுமாக எதிரானவர்கள், பச்சை காற்கறிகள் மற்றும் தாவர உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள்.

அப்படிப்பட்ட Veganகளை வலுக்கட்டாயமாக நிறுத்தி, அவர்கள் கண்முன்னே KFCயின் ஜின்கர் பர்கரை ரசித்து ருசித்து சாப்பிட்டு வெறுப்பேற்றி இரண்டு பேர் டிக்-டொக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் தலைநகரான மெல்போர்னில், வீகன்கள் சிலர் மக்களை தாவர உணவுகளை சாப்பிட வலியுறுத்து ஒரு பேரணியை நடத்தியுள்ளனர்.

அப்போது டிக்-டொக் தளத்தில் சுமார் 85,000க்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்ட Nick மற்றும் Bill எனும் ப்ராங்க்ஸ்டர்கள் திடீரென அவர்களை வழிமறித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவருமே தனித்தனியாக வைத்திருந்த இரண்டு KFC பார்சலிலிருந்து ஜின்கர் பார்கர்களை எடுத்து வேண்டுமென்றே அவர்களை பார்க்கவைத்து சாப்பிட்டு வெறுப்பேற்றியுள்ளனர்.

அவர்கள் சாப்பிட்டது மட்டுமல்லாமல், அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு வீகனையும் "ஒரு கடி கடியுங்கள்" என்று கிண்டல் செய்துள்ளார்கள்.

இந்த வீடியோ டிக்-டொக்கில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

இது ஒருபுறம் காமெடியாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இவர்களின் செயலுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், பலர் இந்த இரண்டு நபர்களையும் வன்மையாக கண்டித்து கமண்ட் செய்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்