உப்பிய கண்களின் வீக்கத்தை குறைக்க பலன் தரும் டிப்ஸ்

Report Print Printha in அழகு

தூக்கமின்மை, நீர் கோர்த்துக் கொள்ளுதல், அழுகை, ஈரப்பதமின்மை, ஒவ்வாமை இது போன்ற பல காரணங்களினால் கண்கள் உப்பி காணப்படலாம்.

ஆனால் இவ்வாறு கண்கள் வீங்கி காணப்படுவது அழகு பிரச்சனையில் ஒன்று. இந்த கண் வீக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற பல பயனுள்ள வழிகள் இதோ,

கண்களின் வீக்கத்தை போக்குவது எப்படி?
  • 2 ஸ்பூன்களை குளிர்சாதனப் பெட்டியில் 5-10 நிமிடங்கள் அதை வீங்கிய கண்கள் மீது 5-7 நிமிடங்கள் வரை வைத்து லேசாக அழுத்தி எடுக்க வேண்டும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பிரித்தெடுத்து அதை மென்மையாக கண்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவலாக தடவி 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • 2 தேநீர் பைகளை மூடிய கண்களின் மீது வைத்து 5-10 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து அதன் பின் இளஞ்சூடான நீரில் கழுவ வேண்டும்.
  • வெள்ளரிக்காயை இரண்டாக வெட்டி அதை கண்கள் மீது வைத்து 15 நிமிடங்கள் கழித்து ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து கண்களைத் துடைக்க வேண்டும்.
  • அவகடோவை நன்கு மசித்து அந்த கூழை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • குளிர்ந்த நீரை பாதிக்கப்பட்ட இடத்தில் வீசி அடித்து கழுவி வந்தால் கண்களின் வீக்கம் குறையும்.
  • உருளைக் கிழங்கு வட்டமாக நறுக்கி அதை கண்கள் மீது 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்