பொடுகினால் தலை அரிப்பா? இதே இயற்கை வைத்தியம்

Report Print Kavitha in அழகு
810Shares
810Shares
lankasrimarket.com

தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது, இதனால் உண்டாகும் பொடுகால் அரிப்பு ஏற்படுகிறது.

பொடுகு இருந்தால் பேன், ஈறு வந்து ஒட்டிக் கொள்ளும்.

கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.

தலையில் புண் அல்லது வெட்டுக்காயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும், புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

  • ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி, சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சுத்தமாகிவிடும்.
  • இலுப்பை புண்ணாக்கை பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கி இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.
  • வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
  • பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது பொடுகுக்கு நல்லது.
  • வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
  • சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கவும். அப்புறம் 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
  • பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
  • தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
  • அருகம்புல் சாறு எடுத்து, தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி, அப்புறம் ஆற வைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
  • வேப்பிலை சாறும், துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.

குறிப்பாக ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்