முகத்தில் அதிகம் எண்ணெய் வழிகிறதா?

Report Print Thuyavan in அழகு
268Shares
268Shares
lankasrimarket.com

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், இதற்கு ஏற்றார் போல் முகத்தின் சருமத்தை பாதுகாப்பதில் ஆண், பெண் என இருதரப்பினரும் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர்.

சரும பிரச்சனையால் அவதிபடும் பெரும்பாலானோருக்கு இந்த எண்ணெய் பசை சருமம் தான் தீர்க்க இயலாத விடயமாய் இருக்கிறது. குறிப்பாக முகத்தின் அழகை குறைத்து முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனையில் விடுகிறது. அதற்கான சரியான தீர்வை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் குளிர் காலத்தை விட கோடைக்காலத்தில் தான் அதிகளவு பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்பதை நாம் கவனித்ததுண்டா?

முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம் கருமையாகவும் காட்சியளிக்க துவங்கும். இதை எப்படி தடுப்பது என்பதை தான் கீழ் வரும் குறிப்புகளில் காணப்போகிறோம்.

அழகான சருமம் உள்ளவர்களை பார்த்தால், இவர்களென்ன பாலில் தான் குளிப்பார்களா? என்று வேடிக்கையாய் கேட்போம். ஆனால் உண்மையிலேயே பாலில், எண்ணெய் பசை சருமத்தினருக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும் சிறந்த மருத்துவ பண்புகள் உள்ளன.

பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதை காலையிலும், இரவில் தூங்கும் முன்பும் செய்து வந்தால், முகத்தில் வழியும் எண்ணெயை பசையைத் தடுக்கலாம்.

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தின் சாற்றினை பிழிந்து எடுத்து, அதனை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்.

மண மணக்கும் சந்தனம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிக்கும். அத்தகைய சந்தன பவுடரை மஞ்சளுடன் சேர்த்து மாஸ்க் போடுவது எண்ணெய் பசை சருமத்தினருக்கு நல்லது.

பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கவதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. இச்செடியின் இலையை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் கழுவி வர, முகத்தில் உள்ள அதிகப்படியாக எண்ணெய் பசை நீங்குவதோடு, சரும பிரச்சனைகளும் அகலும்.

முட்டையின் மஞ்சள் கருவில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து ஸ்கால்பில் நேரடியாக தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால், தலையில் இருந்து முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம்.

அதிக மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் இந்த வேப்பிலை நீரால் முகத்தை தினமும் கழுவி வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீயல் பண்புகள் பருக்களை கட்டுப்படுத்தும்.

சருமத்தை மென்மையாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ள முல்தானி மெட்டி உதவியாக இருக்கும். 4 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் நலம் காணலாம்.

டீ பைகளைக் கொண்டு டீ தயாரித்த பின், அந்த டீ பைகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்வதன் மூலம் சருமத்துளைகளில் அடைத்துள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்துளைகளை சுத்தம் செய்து, முகத்தை பிரகாசமாக காட்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்