அழகாய் ஜொலிஜொலிக்க இதை மட்டும் பயன்படுத்தினால் போதும்

Report Print Kabilan in அழகு

சமைப்பதற்கும், விளக்கேற்றவும் பயன்படுத்தப்படும் விளக்கெண்ணெய் அழகை பராமரிக்கவும் உதவுகிறது.

இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இங்கே காணலாம்.

உதடுகள்

ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யை இரவு தூங்குவதற்கு முன்னர் உதட்டில் தேய்த்துவிட்டு தூங்க வேண்டும்.

மறுநாள் காலையிலும் எழுந்ததும் இதனை மறுபடியும் செய்ய வேண்டும். இதன்மூலம், அழகான உதடுகளை பெறலாம்.

புருவம்

விளக்கெண்ணெய்யை தினமும் இரவில், புருவங்களில் தடவி வந்தால் வில் போன்ற புருவத்தை பெறலாம்.

முகப்பொலிவு

விளக்கெண்ணெய்யை சில துளிகள் பருத்தி துணியில் நனைத்து முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், வெதுவெதுப்பான நீரில் அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதன் மூலம், முகத் துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவை தரும்.

முடிவளர்ச்சி

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த கலவையை இரவில் தூங்குவதற்கு முன்னர், தலை மற்றும் கூந்தலில் தேய்த்துவிட்டு காலையில் Shampoo கொண்டு குளிக்க அடர்த்தியான கூந்தலை பெற முடியும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers