சரும சுருக்கத்தை போக்கும் அன்னாசிப்பழத்தின் அழகு குறிப்புகள்

Report Print Kavitha in அழகு
57Shares
57Shares
ibctamil.com

30 வயது தாண்டினாலே சில பெண்களுக்கு சரும சுருக்கம் மற்றும் முகச்சுருக்கம் வர ஆரம்பித்து விடுகின்றது.

இதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட அழகு சாதன பொருட்களை வாங்கி சரும சுருக்கங்களை தற்காலிகமாக போக்குவதுண்டு. இதற்கு நாம் இயற்கை பொருட்களை கொண்டே சுருக்கங்களை எளிய முறையில் போக்கலாம்.

சரும சுருக்கங்களை போக்க அன்னாச்சி ஒரு சிறந்த மருந்து.

சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாச்சிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாச்சிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.

  • அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாச்சிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். சருமம் பளபளப்பாக காட்சி தரும்.
  • சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாச்சிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
  • அன்னாசிப்பழச் சாறுடன் தேங்காய்ப் பாலை சம அளவு எடுத்து, இவை கலக்கும் அளவுக்கு பயத்தமாவு சேர்த்து முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவினால் வீக்கம் குறையும். இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான சிகிச்சை. எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.
  • 2 டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாச்சிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கலாம். வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாச்சிக்கு உண்டு.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்