முகம் பளிச் பளிச் என மின்னிட வேண்டுமா ? அப்போ இந்த ஒரு பழம் மட்டுமே போதும்

Report Print Kavitha in அழகு

இன்றைய காலக்கட்டத்தில் முகம் பளிச் பளிச் என மின்னிட எத்தனையோ கிறீம்கள் இருந்த இயற்கை முறை சிறந்ததாக கருதப்படுகின்றது.

இதில் சிட்ரஸ் ரக பழங்களில் ஒன்றான கிவி பழம் சரும அழகை கூட்டுவதற்கு பெரிதும் உதவி புரிகின்றது.

கிவி பழத்தில் உள்ள தாதுக்கள் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் உள்ள விட்டமின் ஈ சருமம் வயதாவதிலிருந்து தடுக்கிறது.

இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் மாற்றுகிறது.

அந்தவகையில் கிவி பழத்தினை வைத்து முக அழகினை எப்படி பளிச் என்று மாற்றுவது என்பதை பார்ப்போம்.

  • பாதி கிவி பழத்தை எடுத்து நன்றாக பேஸ்ட் மாதிரி பிசைந்து கொள்ளவும். இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் யோகார்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
  • பாதி கிவி பழம் மற்றும் பாதி ஆப்பிள் பழத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்து இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • 6-8 பாதாம் பருப்புகளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த பருப்பை மி"ில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கிவி பேஸ்ட்டை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • பாதி கிவி மற்றும் பாதி வாழைப்பழத்தை பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும். இதனுடன் யோகார்ட் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
  • பாதி கிவி பழத்துடன் தேன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் ஜொலி ஜொலிக்கும்.
  • அவகேடாவை நன்றாக பிசைந்து அதனுடன் பாதி கிவி பழத்தை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போட்டு கொள்ளவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
  • ஒரு கிவி பழத்தை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் 2-3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து முகத்தில் தடவி வட்டமான இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவினால் நல்ல பலனை காணலாம்.
  • பாதி கிவி பழம் மற்றும் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் மாதிரி தயாரித்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers