முகத்தில் சிறு சிறு பொரிகள் இருக்கின்றதா? இதோ இயற்கையான எளிய வழிமுறை

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலருக்கு முகத்தில் சிறு சிறு புள்ளிகள் போல் வியர்குரு போன்று தோன்றமளிக்கும். இது முகத்தின் அழகினையே கெடுத்து விடுகின்றது

காரணம் முகத்தில் படும் முடிக்கற்றைகளால் உண்டாகும் அலர்ஜிதான்.

இதனை இயற்கை முறையில் எளிதில் போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை

  • கசகசா - 2 டீஸ்பூன்
  • துளசி இலை - 10

செய்முறை

இவ்விரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பருத்தி துணியினை குளிர்ந்த நீரில் முக்கி பிழிந்து அதனை முகத்தில் போடுங்கள்.

அதன் மீது இந்த கலவையை பற்று போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் பலன் தெரியும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள்.

துணியில்லாமலும் முகத்தில் போடலாம். ஆனால் அதன் சாறு எளிதில் வழிந்துவிடும். அதற்காகத்தான் துணியில் போட்டால் எளிதில் சருமம் உறிஞ்சிக் கொள்ளும்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்