மண்வாசனை நிதிசேர் நடை பயணம்: "வேர்களுக்காக"

Report Print Arbin Arbin in கனடா
மண்வாசனை நிதிசேர் நடை பயணம்:

கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010ம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு, சிறுவர்- முதியோர் காப்பகங்களுக்கான உதவி, இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடா வாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் தாயகத்தில் இடம்பெற்ற போரில் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள எம் தாயக உறவுகள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாம‌றிந்த உண்மை.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நம் உறவுகள் தமக்கான பொருளாதார‌ தேவைகளுக்காக புலம் பெயர்ந்த உறவுகளின் உதவியினை நாடியுள்ளார்கள்.

அதன் அங்கமாக‌ மன்னார் உதயபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள எம் உறவுகளின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்கும் முகமாக மண்வாசனை ஒரு நிதிசேர் நடை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அவர்களுக்கான வாழ்வாதார அத்தியாவசிய உதவிக்கான உடனடி நிவாரணத்தைத் துரிதப்படுத்தும் நோக்குடன் யூன் மாதம் 25 ஆம் நாள் 2016 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு Markham and Steels சந்திப்பில் அமைந்துள்ள ஜோன் டானியல்ஸ் பூங்காவில் “வேர்களுக்காக” நிதிசேர் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலத்தின் தேவையுணர்ந்து எம் உறவுகளின் துயர்துடைக்க ஊடகங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், அமைப்புகள் மற்றும் ஆலயங்கள் எம்முடன் இணைந்து பாதம் பதிக்க உரிமையுடன் அழைக்கிறோம்.

ஏழு ஆண்டுகள் கடந்தும் எம் உறவுகளின் துயர்துடைக்க மறுப்போமாயின் எம் வேர்களை நாமே தொலைத்தவராவோம். பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்நகர்த்தப்பட்ட ஒரு இனமாக எம்மினம் மாற்றப்படுவதை மாற்றி அமைத்து கனடிய ஈழத்தமிழ் மக்களாக கனடிய மண்ணில் எம் பாதங்களை அவர்களுக்காகப் பதித்து வரலாறு படைப்போம் வாரீர்.

"போரில் நொடிந்தவர்கள் வாழ எம்மை எருவாக்குவோம்"

இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்குகிறது. உங்களுடைய படைப்புகளுக்கும் இலவச ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments