ஆசிய மக்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படும்: கனடிய குடிமகனின் விளம்பரத்தால் சர்ச்சை

Report Print Peterson Peterson in கனடா
ஆசிய மக்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படும்: கனடிய குடிமகனின் விளம்பரத்தால் சர்ச்சை

கனடா நாட்டில் குடிமகன் ஒருவர் ‘ஆசிய மக்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற நிபந்தனையுடன் விளம்பரம் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Burnaby என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விட விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

அதில், 3 படுக்கை அறைகள் வசதி கொண்ட வீட்டின் மாத வாடகை 1,500 டொலர் என்றும், ஆனால் ஆசிய நாட்டை சேர்ந்த நபருக்கு தான் வாடகைக்கு விடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விளம்பரத்தை நடாலி என்ற பெண்மணி பார்த்துள்ளார். ஆனால், ‘Asian Only’ என்ற வார்த்தைகளை அவர் பார்க்க தவறியுள்ளார்.

உடனடியாக வீட்டு உரிமையாளரை தொடர்புக்கொண்டு வாடகை குறித்து விசாரணை செய்துள்ளார்.

அப்போது வீட்டு உரிமையாளர் பெண்ணின் நாட்டுடமையை பற்றி விசாரிக்க அவருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரத்தை மீண்டும் பார்த்தபோது தான் அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை பார்த்துள்ளார்.

இனவாதம் மற்றும் பிரிவினையை தூண்டும் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என அப்பெண் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் சார்பில் விளம்பரத்தை வெளியிட்ட Yi Zhou என்ற நபர் பேசியபோது, ’வீட்டு உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தான் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டோம்.

இதற்கு முன்னதாக அந்த வீட்டில் வெள்ளைக்காரர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் தினமும் மது மற்றும் போதை மருந்து அருந்துவதால் அவர்களது பின்னணி உள்ள நபர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட மறுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், வீட்டு உரிமையாளருக்கு ஆங்கிலம் சரியாக பேச தெரியாது என்பதால், அவர்களால் அந்த வெள்ளையர்களை எதிர்த்து பேச முடியவில்லை.

இந்த விவகாரத்தை எதிர்கொள்ளவும் அவர் ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

வீட்டு உரிமையாளர் எண்ணியது போல் ஒரு ஆசிய நாட்டை சேர்ந்த நபருக்கு தான் அவர் தற்போது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.

ஆனால், வீட்டு உரிமையாளரின் இச்செயல் மனித உரிமைகளுக்கு எதிரானது என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவுகள்

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments