கனடாவில் இலவசமாக வழங்கப்படும் காணிகள் - புதிய குடிவரவு நியமன திட்டம்

Report Print Gokulan Gokulan in கனடா

கரைக்கு கரை கனடாவின் மாகாண நியமன திட்டம் [PNPs] தொழிலாளர்கள் பட்டதாரிகள் தொழில் முனைவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கனடா வருவதற்கு ஒரு பாதையை தொடர்ந்து அனுமதிக்கின்றது.

கோடை காலத்தின் முதல் அரை காலாண்டு பகுதியில் குறிப்பாக ஒன்ராறியோ நோவ ஸ்கோசியா பிரிட்டிஷ் கொலம்பியா மனிரோபா மற்றும் அல்பேர்ட்டா மாகாணங்களில் இந்நடவடிக்கைகள் பெருமளவில் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நியமனத்திட்டத்தினூடாக கனடிய மாகாணங்கள் தனி நபர்களை தங்கள் மாகாணத்திற்கு குடிவரவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண பரிந்துரைத்திட்ட நுழைவு எக்ஸ்பிரஸ் நுழைவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

கனடாவின் குடிவரவு நிலைகள் திட்டத்தின் கீழ் 2017ல் மட்டும் 54,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடாவிற்குள் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஒன்ராறியோ:

ஒன்ராறியோ அரசாங்கத்தின குடிவரவு திணைக்களம் கடந்த சில வாரங்களாக மாகாணத்தின் குடிவரவு நியமன திட்டத்தினூடாக விண்ணப்பதாரர்களை வரவழைக்கும் முயற்சியில் பிசியாக இருப்பதாக அறியப்படுகின்றது.

கீழ் குறிப்பிடப்பட்ட தொழில்களில் அனுபவம் வாய்ந்தவர்களிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அனுபவம் உள்ளவர்கள் 400புள்ளிகளிற்கும் குறைவான புள்ளிகளை எடுத்திருந்தாலும் விரிவான தரப்படுத்தல் அமைப்பின் (CRS) கீழ் விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

NOC 0131: Telecommunication Carriers Managers

NOC 0213: Computer and Information Systems Managers

NOC 2133: Electrical and Electronics Engineers

NOC 2147: Computer Engineers (Except Software Engineers and Designers)

NOC 2171: Information Systems Analysts and Consultants

NOC 2172: Database Analysts and Data Administrators

NOC 2173: Software Engineers and Designers

NOC 2174: Computer Programmers and Interactive Media Developers

NOC 2175: Web Designers and Developers

NOC 2241: Electrical and Electronics Engineering Technologists and Technicians

NOC 2281: Computer Network Technicians

NOC 2282: User Support Technicians

NOC 2283: Systems Testing Technicians

NOC 5224: Broadcast Technicians

NOC 5241: Graphic Designers and Illustrators

All the while, under the Human Capital Priorities stream Ontario has continued to issue Notifications of Interest (NOIs) on a weekly basis to a broad range of candidates who may not necessarily have IT-related experience.

அது மட்டுமன்றி ஒன்ராறியோ குடிவரவு நியமன திட்டம் தொடர்ந்தும் பிரெஞ்ச் மொழி பேசுபவர்கள் பட்டதாரிகள் வர்த்தகர்கள் தொழில் முனைவோர்கள் போன்றவர்களை வரவேற்கும் என கூறப்படுகின்றது.

வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள்ஃபட்டதாரிகள் தற்போது உரிமையாளர்கள் வேலை வாய்ப்புக்கள் ஸ்ட்ரீம்சின் கீழ் ஒரு அடிப்படை ஒன்ராறியோ குடிவரவு நியமன திட்டத்திற்கும் விண்ணப்பிக்கலாம் என ஓன்ராறியோ தெரிவித்துள்ளது.

நோவ ஸ்கோசியா

யூலை 5 நோவ ஸ்கோசியா தனது கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. நிதி துறை சுகாதார பராமரிப்பு பொறியியல் தகவல் தொழில் நுட்பம் கல்வி சமூக வேலை மற்றும் சட்டம் ஆகிய துறைகள் அடங்குகின்றன.

பின்வரும் தொழில்களிற்கு குறிப்பிட்ட சில கடுகதி நுழைவு விண்ணப்பதாரிகள் நோவ ஸ்கோசிய நியமன திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு இன்றி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NOC 1111: Financial Auditors and Accountants

NOC 1114: Other financial officers

NOC 1123: Professional occupations in advertising, marketing and public relations

NOC 1241: Administrative assistants

NOC 1311: Accounting and related clerks

NOC 2131: Civil engineers

NOC 2171: Information systems analysts and consultants

NOC 2174: Computer programmers and interactive media development

NOC 2281: Computer network technicians

NOC 2282: User support technicians

NOC 3012: Registered nurses and registered psychiatric nurses

NOC 3233: Licensed practical nurses

NOC 4021: College and other vocational instructors

NOC 4211: Paralegal and related occupations

NOC 4212: Social and community service workers

NOC 6235: Financial sales representatives

பிரிட்டிஷ் கொலம்பியா:

சமீபத்திய வாரங்களிலும் மாதங்களிலும் பிரிட்டிஷ் கொலம்பியா ஐவுஃதொழில் நுட்பவல்லுனர்களை தேடும் மற்றய மாகாணங்களுடன் இணைந்து கொண்டுள்ளது.

தொழில் முறை அற்ற பணியாளர்கள் பட்டதாரிகள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றுகொள்ள முன்வந்துள்ளது.

வன்கூவர் பெரும்பாகம் வடஅமெரிக்காவிலேயே மிக வெற்றிகரமான தொழில் நுட்ப மையங்களை கொண்ட பகுதியாக விழங்குகின்றது.

மனிரோபா

மனிரோபா மாகாணம் யூலை 11ல் மாகாண பரிந்துரை திட்டத்தின் கீழ் 494 தொழிலாளர்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அல்பேர்ட்டா:

2017ல் இதுவரை அல்பேர்ட்டா 3150 மாகாண பரிந்துரை திட்ட சான்றிதழ்களை வழங்கியுள்ளதுடன் 5550ஒதுக்கீடுகளை செய்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.

பரிந்துரை சான்றிதழ் பெற்ற தனிப்பட்டவர்கள் கனடிய அரசாங்கத்தின் நிரந்தர வதிவிடமைக்கும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய வேலை வாய்ப்பு விவசாயிகள் நுழைவுத்திட்டத்தின் கீழ் இவர்கள் பண்ணை ஒன்றை அல்பேர்ட்டாவில் வாங்குவதற்கும் வாய்ப்புக்கள் உண்டென அறியப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers