உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்த பெண் விளம்பரத்தில் தோன்றியதன் விளைவு?

Report Print Mohana in கனடா
260Shares
260Shares
lankasrimarket.com

தனது தனியுரிமை மீறப்பட்டது, உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்ததை அனுமதி இன்றி பதிவுசெய்து வர்த்தக விளம்பரத்திற்காக பயன்படுத்தி தனது தனியுரிமை மீறப்பட்டதை வெற்றிகரமாக வாதாடிய ஒட்டாவா பெண் ஒருவருக்கு 4,000 டொலர் வெகுமதி வழங்கப்பட்டது.

இச்சம்பவம் ஒன்ராறியோவிற்கு ஒரு முதல் சட்ட நடவடிக்கையாக அமைந்தது.

2014ல் இப்பெண் ஒட்டாவா வெஸ்ட்பொரோ பகுதியில் உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருக்கையில் வீடியோ பதிவாளர் ஒருவர் படமெடுத்ததை கண்டுள்ளார். அச்சமயத்தில் இவர் தனது முகத்தை மறைக்க முயன்றதாக தெரிவித்தார்.

ஒரு வருடத்தின் பின்னர் இவர் ஓடிக்கொண்டிருந்த காட்சி வெஸ்ட்பொரோ குடியிருப்ப condo திட்ட ஊக்குவிப்பு விளம்பரத்தில் வந்ததை கண்டுள்ளார். குறிப்பிட்ட நிறுவனத்தை அணுகி தனது பட காட்சியை அகற்றுமாறு பலதடவைகள் கேட்ட போதும் நிறுவனம் மறுத்து விட்டது.

குறிப்பிட்ட நிறுவனத்தை பெண் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். நீதிபதியும் இவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். வர்த்தக நோக்கத்திற்காக தங்களை ஓருவர் படமெடுப்பதை தடுக்க மனிதருக்கு உரிமை உள்ளதெனவும் தெரிவித்தார்.

பெண்ணின் தனியுரிமையை மீறயதனால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்ட ஈடாக 4,000 டொலர்களும் குறிப்பிட்ட விளம்பரத்திற்காக ஒரு நடிகரை வாடகைக்கு பெற்றால் வழங்கும் தொகையான 100டொலர்களையும் வழங்குமாறு நிறுவனத்திற்கு கட்டளை இட்டார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்