ஒருங்கிணைந்த இந்தியாவையே கனடா என்றும் ஆதரிக்கும்: கனடா பிரதமர்

Report Print Athavan in கனடா

காலிஸ்தான் முடிவை ஆதரிப்பவர் என அறியப்படும் நிலையில் ஒருங்கிணைந்த இந்தியாவையே கனடா ஆதரிக்கும் என்று இந்தியாவை பற்றிய தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துள்ளார் கனடா பிரதமர்.

அரசு முறை சுற்றுப்பயணமாக கனடா பிரதமர் தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார்.

தாஜ்மஹால், காந்தியின் இல்லம் போன்றவற்றை பார்வையிட்ட கனடா பிரதமர் ஒருங்கிணைந்த இந்தியாவையே கனடா ஆதரிக்கும் என பேசியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பன்முகத்தன்மையின் வலிமை என்பதே கனடாவின் வலிமை என நாங்கள் அறிந்திருக்கிறோம்.

கனடாவின் வெற்றிக்கு பரந்த அளவிலான கருத்து சுதந்திரம் ஒரு முக்கிய பகுதியாகும், வன்முறையையும் வெறுப்புணர்ச்சியையும் தூண்டும் பேச்சுக்களை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்.

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவை பொறுத்தவரை கனடாவின் நிலைப்பாடும், எனது நிலைப்பாடும் சற்றும் மாறவில்லை, நாங்கள் ஒன்றுபட்ட இந்தியாவை ஆதரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்