நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக 9-வயது மகனை கடத்திய தாய்

Report Print Mohana in கனடா
120Shares
120Shares
lankasrimarket.com

வன்கூவர் நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவிற்கு மாறாக தனது 9-வயது மகனை கடத்தி சென்றுள்ள தாயை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஷவானா சௌத்ரி என்ற இப்பெண் இவரது மகன் எமர்சன் கஸ்வேத் மற்றும் ஆறு வயது மகள் அத்துடன் ஒன்று அல்லது இரண்டு நாய்களுடன் பயணம் செய்யலாம் என கூறப்படுகின்றது.

வீட்டில் இருந்து ஒரு நீடிக்கப்பட்ட காலம் வரை விலகி இருக்க சௌத்ரி திட்டமிட்டிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.

பிள்ளைகளிற்கு தீங்கு விளைவிக்கவோ அல்லது ஆபத்து ஏற்படுவதற்கோ எதுவித அறிகுறிகளும் தெரிவதாக அறியப்படவில்லை.

சௌத்ரி 34வயது, 5.8உயரம், 106 இறாத்தல்கள் எடையுடையவர் எனவும் தெற்காசிய நாட்டவர் நீண்ட கறுப்பு முடி மற்றும் கருமையான கண்கள் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மகன் எமர்சன் 9-வயது, தெற்காசி தோற்றம், கறுப்பு முடி மற்றும் கருமையான கண்கள் கொண்டவர் என விபரிக்கப்பட்டுள்ளது.

சௌத்ரியின் மகள் குறித்த விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை. காரணம் இவள் நீதி மன்ற உத்தரவிற்கு உட்பட்டவள் இல்லை என்பதே.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்