கனடாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கொரியா நாட்டவர் கைது

Report Print Arbin Arbin in கனடா
172Shares
172Shares
lankasrimarket.com

கனடாவில் ஒன்றாரியோ பகுதியில் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் பாலியல் தொல்லை அளித்து வந்த கொரியா நாட்டவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒன்றாரியோ பகுதியில் கொரியா நாட்டின் தற்காப்பு கலையான டேக்வாண்டோ-வை பாடசாலை அமைத்து பயிற்சி அளித்து வந்துள்ளார் 44 வயதான ஷின் வூக் லிம். இவரிடம் இளைஞர்கள் இருபாலரும் டேக்வாண்டோ கலையை கற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் ப்ளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒஸிங்டன் அவென்யூ பகுதியில் குடியிருக்கும் இளம்பெண் ஒருவர் இவரிடம் டேக்வாண்டோ பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

குறித்த இளம்பெண்ணிடம் அதிக நெருக்கம் காட்டி வந்த லிம், கடந்த 2015 முதல் 2017 வரையான காலகட்டத்தில் அந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இந்த தகவல் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் டொரான்ரோ பொலிசார் ஷின் வூக் லிம்-ஐ கைது செய்துள்ளனர்.

தற்போது குறித்த நபர் மீது டொரான்ரோ பொலிசார் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 11 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் அந்த நபரால் பாலியல் தொல்லைக்கு இரையான இளம்பெண்கள் எவரேனும் தொடர்புடைய பகுதிகளில் குடியிருந்து வந்தால் உடனடியாக பொலிசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்