பொம்மை போல் நினைத்து கடித்து குதறியது: தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் கண்ணீர்

Report Print Fathima Fathima in கனடா
315Shares
315Shares
lankasrimarket.com

கனடாவில் துணிப்பொம்மை போன்று நாய் கடித்து குதறியதாக தாக்குதலுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த செவ்வாயன்று இரவு Aldergrove ரயில் நிலையம் வந்துள்ளார்.

அங்கே நின்று கொண்டிருந்த நாய் ஒன்று முறைத்து பார்த்தபடி, அவரை தாக்கத் தொடங்கியுள்ளது, காலில் கடித்து குதறிய நிலையில், தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

அவர் வலியால் கத்த, விசில் சத்தம் கேட்டவுடன் நாய் அங்கிருந்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் இளம்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், உடல் நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு ஆளான போது நடந்த சம்பவம் குறித்து பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு நாயின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இனிமேல் இதுபோன்ற நடக்காமல் இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், நாயின் உரிமையாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்