நண்பனாக பழகி ஏமாற்றிய ஆண்: கனடா பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

Report Print Kavitha in கனடா
185Shares
185Shares
lankasrimarket.com

டெல்லியில் இரவு விடுதியில் நட்பாகப் பழகிய நபர், தம்மை வீட்டுக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி, பலாத்காரம் செய்ததாக கனடா நாட்டுப் பெண் பொலிசில் புகாரளித்துள்ளார்.

கனடாவை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நண்பர்களுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.

டெல்லியில் கடந்த செவ்வாய் அன்று இரவு Hauz Khas எனும் பகுதியில் உள்ள இரவு விடுதிக்கு தமது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கிருந்த அபிஷேக் எனும் இளைஞன், கனடா பெண்ணுடன் நட்பாக பழகி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கே குறித்த பெண்ணை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது, மயக்கம் தெளிந்ததும் குறித்த பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது, இதனையடுத்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்