இலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார்! பிரச்சனைகள் முடிந்துவிட்டதா? சகோதரர் பதில்

Report Print Santhan in கனடா

பிரபல திரைப்பட நடிகையான ரம்பா இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதனை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்திரன் பத்மநாதன் கனடாவில் தொழிலதிபராக உள்ளார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதன் பின் நடிகை ரம்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை என்றும் குடும்பம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டுள்ளதாகவும் தன் கணவரை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் கூறியிருந்தார்.

இதையடுத்து கணவன் - மனைவி இருவருக்குமிடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்க, ரம்பாவுக்கும் அவரின் கணவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவுரை வழங்கியது.

அதன் பின் ஒருவழியாக ரம்பா தன் கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சி வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் ரம்பா தன்னுடைய 3-வது குழந்தைக்காக காத்திருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார்.

இதனால் தற்போது கனடாவில் கணவருடன் வசித்து வரும் ரம்பாவை பார்ப்பதற்காக நடிகர் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, கத்ரீனா கைப், பிரபுதேவா போன்ற பலரும் சென்று பார்த்தனர்.

ஒரு நிகழ்ச்சிக்காக இவர்கள் கனடா சென்றிருந்த போது அவரை நலம் விசாரித்துள்ளனர்.

இது குறித்து ரம்பாவின் சகோதரர் லட்சுமி ஶ்ரீனிவாசன் கூறுகையில், கனடாவிற்கு அவர்கள் நிகழ்ச்சிக்காக வந்த போது ரம்பாவை சந்தித்தார்கள்.

அப்போது அவர்கள் தங்கள் நிகழ்ச்சிற்கு நீங்களும் வர வேண்டும் என்று ரம்பாவை அழைத்ததாகவும், ஆனால் ரம்பவோ தற்போது இருக்கு சூழ்நிலையில் எப்படி என்று கேட்க, உடனே அவர்கள் நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று கூப்பிட்டு சென்றார்கள்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர்கள் எல்லாம் ரம்பாவை வந்து பார்த்ததால், ரம்பா எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தார்.

ரம்பா, இந்திரகுமார் பிரச்சனை குறித்து கேட்ட போது, ஒவ்வொரு கணவன், மனைவிக்கும் இருக்கும் சின்ன, சின்ன பிரச்சனைகள் தான் இவர்களுக்குள்ளும் இருந்திருக்கு, தற்போது எல்லாப் பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிட்டது. சமாதானமும் ஆகிவிட்டார்கள்.

பிரபலம் என்பதால் இந்த விஷயம் பலருக்கும் தெரிந்துவிட்டது, இப்போ மகிழ்ச்சியா இருக்கிறார்கள். இரண்டு பேருக்குமான பிரச்னைகள் முடிவுக்கு வராம இருந்திருந்தால் எப்படி மூன்றாவது குழந்தை என்று புன்னகையோடு முடித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்