கனடாவில் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் வானம்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காட்டுத் தீ பற்றி எரிந்த போது சேர்ந்த நீராவி மற்றும் புகையால் வானம் வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது.

யோகான் மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் தீ எரியும் பகுதியில் அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் நீராவி ஏற்பட்டு வருகிறது.

புகை மற்றும் நீராவியின் காரணமாக யோகான் மலைப்பகுதியில் வானம் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது.

இது சம்மந்தமான கண்கொள்ளா காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers