உயிர்பலி வாங்கும் பாக்டீரியாவால் கனடாவில் பீதி: எதன் மூலம் பரவுகிறது தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடா மற்றும் அமெரிக்காவில் ரோமெயின் என்ற கீரையை அதிகம் பயன்படுத்தும் நிலையில் இ கோலி என்ற பாக்டீரியா இதன்மூலம் பரவுவதால் மக்கள் பீதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நாடுகளில் இ கோலி என்ற பாக்டீரியா மனிதனை தாக்குகிறது. இவற்றின் தாக்குதலுக்குள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

கடந்த கோடை காலத்தில் அமெரிக்காவில் 5 பேர் இந்த பாக்டீரியா தாக்குதலால் உயிரிழந்தனர். இ கோலி பாக்டீரியா எப்படி மனிதனை தாக்குகிறது என்பதை கண்டுபிடிக்க ஆய்வுகள் நடந்தன.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் ரோமெயின் என்ற கீரையை மக்கள் அதிகமாக பயன்படுத்துவது வழக்கம். இந்த கீரையில் இ கோலி பாக்டீரியா பரவி அவை மனிதனை தாக்குவது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கீரையை யாரும் பயன்படுத்த வேண்டாம். கடைகளிலும் இவற்றை விற்க கூடாது என்று அமெரிக்கா, கடனா அரசுகள் அறிவித்துள்ளன. இதனால் இந்த கீரையை பார்த்தாலே மக்கள் பீதியடையும் நிலை உள்ளது.

தற்போது அமெரிக்காவில் 32 பேரும், கனடாவில் 18 பேரும் இ கோலி பாக்டீரியா தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாக்டீரியா மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்