கென்ய தீவிரவாத தாக்குதலில் கனேடியர் ஒருவருக்கும் தொடர்பு? மறுப்பு தெரிவிக்கும் குடும்பத்தார்

Report Print Balamanuvelan in கனடா

செவ்வாயன்று கென்யாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 21 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கனேடியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அவர் நிரபராதி என்று தெரிவித்துள்ளனர்.

கென்ய தலைநகரான நைரோபியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 21பேர் பலியான நிலையில், தீவிரவாதிகளுக்கு உதவியதாக 11பேர் பொலிசாரின் சந்தேக வளையத்திற்குள் சிக்கியுள்ளனர்.

அவர்களில் கனடாவைச் சேர்ந்த Abdihakim Guleid (46)என்பவரும் ஒருவர். துப்பாக்கி ஏந்திய நால்வரும், மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஒருவரும் நடத்திய தாக்குதலில் 21பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் பிரித்தானியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவன அலுவலரான Luke Potterம் அமெரிக்க தொழிலதிபரான Jason Spindlerம் அடங்குவர். இதுபோக 28 பேர் அந்த தாக்குதலில் காயமடைந்தனர்.

சோமாலிய தீவிரவாத அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என கருதப்படும் அந்த ஆயுதம் தரித்த நால்வரும் பொலிசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர்.

அந்த தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகையில் உதவிய பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் Abdihakim Guleid உட்பட நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அவர்கள் 30 நாட்கள் விசாரணைக்காக பொலிசாரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். கனேடியரான Abdihakim Guleid தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் Abdihakimஇன் சகோதரரான Abdul Guleid, தனது சகோதரர் அவரது குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக கென்யா சென்றிருந்ததாக தெரிவிக்கிறார்.

Abdihakimஇன் டொராண்டோவில் ட்ரக் ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததை அவரது ஓட்டுனர் உரிமம் உறுதி செய்கிறது.

அவர் வசித்து வந்த வீட்டில் தற்போது வசிக்கும் Abdihakimஇன் சகோதரியின் வீட்டு ஜன்னலில், என் மாமா எந்த தவறும் செய்யவில்லை என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்ட வைக்கப்பட்டுள்ளது.

தனது சகோதரர் எந்த தவறும் செய்திருக்க மாட்டார் என தான் 100 சதவிகிதம் நம்புவதாக தெரிவிக்கும்Abdul, ஆனால் இதுவரை அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்கிறார்.

ஒரு வழக்கறிஞரை நியமித்து அவர் ஒரு நிரபராதி என நிரூபிக்கப் போவதாக தெரிவிக்கும் Abdul, எல்லோரையும் போல அவரும் ஒரு சாதாரண நபர், ஒரு நல்ல குடும்பஸ்தர் என்கிறார்.

அவர் அப்படி ஒரு குற்றச் செயல் புரியும் ஆசையோ எண்ணமோ கொண்டவர் அல்ல என்பது, எனக்கு 100 சதவிகிதம் உறுதியாகத் தெரியும் என்கிறார் Abdul.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers