இளம் பெண் ஆணவ கொலை: 18 வருடத்திற்கு பின் நாடு கடத்தப்படும் இந்தியர்கள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவை உலுக்கிய ஆணவ கொலை வழக்கில் குற்றவாளிகளான தாயார் மற்றும் உறவினரை நீண்ட 18 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கனடாவில் பிறந்த ஜஸ்வீந்தர் கவுர் சித்து என்ற ஜஸ்சி பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் குடியிருந்து வந்துள்ளார்.

ஜஸ்சி, இந்தியாவின் பஞ்சாபி மாநிலத்திற்கு சென்றபொழுது ஆட்டோ ஓட்டுனரான சுக்வீந்தர் சிங் மித்து என்பவரை காதலித்துள்ளார்.

இவர்கள் இருவரது காதலுக்கு ஜஸ்சியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஜஸ்சிக்கு அப்போது 25 வயதாக இருக்கும்போது குடும்பத்தாரின் கடும் எதிர்ப்பினை மீறி மித்துவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜஸ்சி மற்றும் மித்து தம்பதிகளை கூலிப்படையினரை ஏவி கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதற்கு ஜஸ்சியின் தாயார் மற்றும் மாமா உடந்தையாக இருந்துள்ளனர். இதில், ஜஸ்சியை கொடூர கொலை செய்தபின் அவரது உடலை கழிவு நீர் ஓடையில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

மித்துவை கடுமையாக தாக்கி பின் அங்கேயே விட்டு சென்றனர். ஆனால் மித்து உயிர் பிழைத்து விட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் பஞ்சாப் பொலிசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்சியின் தாயார் மல்கித் சித்து மற்றும் மாமா சுர்ஜித் பதேசா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டு 2 குற்றவாளிகளையும் நாடு கடத்தும்படி கனடா அதிகாரிகளிடம் இந்திய காவல்துறை கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் 2016 ஆம் ஆண்டு இவர்களை நாடு கடத்த பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் தடை விதித்தது.

இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு அவர்களை நாடு கடத்த கனடா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தீர்ப்பினை மறுஆய்வு செய்ய குற்றவாளிகள் கோரினர். இதனால் நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இறுதியில் 2018 டிசம்பரில் கனடா நீதிமன்றம் ஒன்று இவர்களை நாடு கடத்த உத்தரவிட்டது. அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் பஞ்சாப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers