சாலையில் அப்பளம் போல நொறுங்கிய கார்! பரிதாபமாக உயிரிழந்த நபர்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கார், கம்பத்தில் வேகமாக மோதிய நிலையில் காரை ஓட்டிய நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Brampton நகரை சேர்ந்த 23 வயதான நபர் நேற்று Finch Avenue பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரானது வேகமாக அங்கிருந்த கம்பத்தின் மீது மோதி அப்பளம் போல நொறுங்கியது.

இதில் பலத்த காயமடைந்த காரை ஓட்டி வந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கார் எதனால் கம்பத்தின் மீது மோதியது என விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கார், எவ்வளவு வேகத்தில் சாலையில் வந்துள்ளது, என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற சாலை விசாரணைக்காக சில மணி நேரம் மூடப்பட்டது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers