கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு போட்டியாக நாடாளுமன்றத்தில் ஒரு இந்திய வம்சாவளியினர்!

Report Print Balamanuvelan in கனடா

ஜஸ்டின் ட்ரூடோவின் போட்டியாளராக பார்க்கப்படும் கனடாவின் புதிய குடியரசு கட்சியின் (NDP) தலைவரான Jagmeet Singh, நேற்று முறைப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Jagmeet Singh, ஒரு ஃபெடரல் கட்சியின் வெள்ளையரல்லாத முதல் தலைவராவார். பதவியேற்றபின் உரையாற்றிய Jagmeet Singh தன்னை தேர்ந்தெடுத்த பர்னபி தெற்கு வாக்காளர்களுக்கும் தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஒவ்வொரு முறை நீங்கள் எதையாவது சாதிக்கும்போதும், அதற்கு காரணமாக பலர் இருப்பார்கள், ஒருபோதும் ஒருவரும் அதை தனியாக சாதிக்க முடியாது என்றார் அவர்.

இளைஞனாக இருக்கும்போது, தான் ஒருநாள் பிரதமருக்கான போட்டியில் இருப்பேன் என கற்பனை செய்து பார்த்தது கூட கிடையாது என்றார் அவர்.

ஆனால் தற்போதுள்ள குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு பெரிய அளவில் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

Jagmeet Singh பிப்ரவரி மாத இறுதியில் பர்னபி தெற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஊழல் புகாரில் சிக்கித் தவித்து வரும் நிலையில், சரியான நேரத்தில் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்துள்ள Jagmeet Singh, வலிமையான பிரதமர் வேட்பாளராக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்