பள்ளிக்கூடத்தில் ஆசிரியரை சரமரியாக தாக்கிய இரண்டு மாணவர்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பள்ளி ஆசிரியரை இரண்டு மாணவர்கள் சரமாரியாக அடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் டொரண்டோவில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அதில், பள்ளி ஆசிரியரை இரண்டு மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்குவது போல உள்ளது.

இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு மாணவர்களும் தாங்களாகவே காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளனர்.

அவர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியருக்கு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இது சம்மந்தமான வீடியோவை வைத்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers