பனிச்சறுக்கு போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற நபருக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் வாகன பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொண்ட நபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள Sun Peaks Resort -ல் வாகன பனிச்சறுக்கு போட்டி சனிக்கிழமை நடந்தது.

இதில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இது குறித்து Sun Peaks Resort வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பனிச்சறுக்கு போட்டி நடந்த பந்தயத்திடலில் விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸில் மருத்துவர்கள் வந்த நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவரின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்