அதிமதுரம் கலந்த தேநீர் பருகியதால் கனேடியருக்கு நேர்ந்த கதி

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் முதியவர் ஒருவர் அதிமதுரம் கலந்த தேநீர் அருந்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கனடாவின் மாண்ட்ரீல் பகுதியில் குடியிருப்பவர் அந்த 84 வயது முதியவர். இவர் தொடர்ந்து 2 வார காலம் அதிமதுரம் கலந்த தேநீரை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் திட்டிரென்று இவரது ரத்த அழுத்தம் உச்சத்தை தொட்டுள்ளது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு மாண்ட்ரீல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

13 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் தற்போது குடியிருப்பு திரும்பியுள்ளார்.

பொதுவாக ரத்த அழுத்தம் 180 புள்ளிகளை தொட்டாலே அது உயிருக்கு ஆபத்தானது என குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள், அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு 200 புள்ளிகள் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி ஒரு வார காலம் தமது ரத்த அழுத்தத்தை கண்காணித்து வந்ததில், வித்தியாசம் இருந்துள்ளதை தெரிந்துகொண்ட அவர்,

இது, தாம் பயன்படுத்தும் அதிமதுரம் கலந்த தேநீரால் ஏற்பட்டது என்பதை அறியவில்லை எனவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே அவரது ரத்த அழுத்தம் சீரானது என கூறும் மருத்துவர்கள்,

ஆனால் மூச்சுத்திணறல் சில நாட்கள் நீடித்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வார காலம் தினசரி இருமுறை அதிமதுரம் கலந்த தேநீர் பருகியதாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னரே அந்த முதியவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் இதுவரை தமது விருப்ப பானமான அதிமதுரம் கலந்த தேநீர் பருகுவதை கைவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers