கனடாவிலும் ஒரு இனப்படுகொலை: கசிந்த ஆவணத்தில் இருந்த தகவல்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் ஆயிரக்கணக்கான பூர்வக்குடியினராகிய பெண்கள் காணாமல் போனது மற்றும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை அமைப்பு ஒன்று, அந்த மரணங்களை கனேடிய இனப்படுகொலை என்று விமர்சித்துள்ளது.

திங்களன்று வெளியிடப்படுவதாக இருந்த அந்த விசாரணை அறிக்கை, நேற்றே லீக்கானதையடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

1,200 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, பூர்வக்குடியின பெண்கள் அனுபவித்த அந்த கணக்கிலடங்கா வன்முறைக்கு காரணம் காலனி ஆதிக்கமும் அதை கண்டு கொள்ளாமல் விட்ட அரசின் கையாலாகத்தனமும்தான் என்று கூறியுள்ளது.

1.6 மில்லியன் பூர்வக்குடிகள் வாழும் கனடாவில், இந்த பூர்வக்குடியின பெண்கள் காணாமல் போனது மற்றும் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்தது.

தொடர்ந்து பூர்வக்குடியின பெண்கள் போராடி வந்ததாலேயே 40 ஆண்டுகளுக்கு பிறகாவது இந்த தீர்ப்பு வெளிவந்திருக்கிறது என்று இந்த பிரச்சினை தொடர்பாக குரல் எழுப்பி வரும் Robyn Bourgeois என்பவர் தெரிவித்தார்.

விசாரணையின் தீர்ப்பு, 1980இலிருந்து கனடாவில் பூர்வக்குடியின பெண்கள் சுமார் 1,200 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று கூறியுள்ள நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

கனடா பிரதமர் பூர்வக்குடியினர் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த விசாரணைக்கு ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்