இறந்தவர் உடலை தரதரவென இழுத்து வந்த சவக்கிடங்கு ஊழியர்: குவியும் கண்டனங்கள்!

Report Print Balamanuvelan in கனடா

ஆல்பர்ட்டாவில் சவக்கிடங்கில் வைப்பதற்கு இடமில்லாததால் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றின் கொள்கலனிற்குள் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்ததோடு, ஒருவரது உடலை சவக்கிடங்கு ஊழியர் ஒருவர் தரதரவென இழுத்து வந்த சம்பவம் வீடியோவாக வெளியானதால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நேற்று பிரபல தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் அரசு மருத்துவமனையின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறிக்குள்ளிருந்து இறந்த ஒருவரின் உடலை சவக்கிடங்கு ஊழியர் ஒருவர் தரதரவென இழுத்து வருவதை படம்பிடித்துள்ளார்.

இந்த வீடியோ வெளியானதையடுத்து கடும் சர்ச்சை வெடித்துள்ளது. முதலாவது உடல்களை லொறிக்குள் வைத்தது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

வீடியோவை காண

கடந்த வாரத்தில், திடீரென அதிக உடல்களை பாதுகாத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதையடுத்து, அதற்கு சவக்கிடங்கில் போதுமான இடம் இல்லாததால் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றின் கொள்கலனிற்குள் இறந்தவர்களின் உடல்களை வைத்திருப்பதாக பதிலளிக்கப்பட்டது.

இதற்கிடையில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியான Dr. Elizabeth Brooks-Limஇடம், ஏற்கனவே மருத்துவமனை ஊழியர் ஒருவர் சவக்கிடங்கில் போதுமான இடம் இல்லாதது குறித்து தகவல் அளித்தும், அவர் சரியான நடவடிக்கை எடுக்காமல், அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றின் கொள்கலனிற்குள் இறந்தவர்களின் உடல்களை வைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டாவதாக, அந்த சவக்கிடங்கு ஊழியர் இறந்தவர் உடலை தரதரவென லொறியின் தரையில் இழுத்து வந்திருக்கிறார்.

வெளிநாடுகளில் இறந்தவர் உடலை அவமதிப்பது பெரும் குற்றமாக கருதப்படுவது பலரும் அறிந்ததே.

இந்நிலையில் வெளியாகியுள்ள வீடியோவில், 17 உடல்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ள அந்த லொறிக்குள்ளிருந்து, சவக்கிடங்கு ஊழியர் ஒருவர், இறந்த ஒருவரின் உடலை தரையில் தரதரவென இழுத்து வருவதை தெளிவாகவே காண முடிகிறது.

அந்த வீடியோ வெளியானதையடுத்து ஆல்பர்ட்டாவின் நீதித்துறை அமைச்சரான Doug Schweitzer, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும், மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உடல்களை மரியாதைக்குரிய விதத்தில் நடத்துவதற்கு வசதியாக போதுமான வசதி செய்ய இருப்பதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்டவரின் உறவினர்களிடம் அரசு மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கிணங்க, நடந்த சம்பவத்திற்காக அரசு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல் தெரிவிக்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்