கனடாவில் இலங்கை தமிழ்ப்பெண் படுகொலை: பட்டப்பகலில் கணவரே கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in கனடா
2330Shares

ரொரன்றோவில் இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவரை அவரது முன்னாள் கணவர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழரான தர்ஷிகா ஜெகன்னாதன் (27) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார்.

அவரை கொலைசெய்த நபர் அவரது முன்னாள் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் (38).

தர்ஷிகா தனது கணவருடன் வாழ்வதற்காக 2017ஆம் ஆண்டுதான் இலங்கையிலிருந்து கனடாவுக்கு வந்துள்ளது குறிபிடத்தக்கது.

இருவருக்கும் இடையில் ஏற்கனவே பிரச்னை இருந்ததாகவும், தர்ஷிகாவை சந்திக்கக்கூடாது என சசிகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதையும் மீறி அவர் சென்று தர்ஷிகாவை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சசிகரன் சாலையில் கத்தியுடன் தர்ஷிகாவை துரத்திச் சென்றதை சிலர் கண்ணால் கண்டிருக்கிறார்கள்.

தர்ஷிகாவைக் கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடிய சசிகரன், பின்னர் பொலிசாரிடம் சென்று சரணடைந்துள்ளார்.

சசிகரன் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் காவலில் அடைக்கப்பட்ட அவர், அடுத்த புதன்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்.

இதற்கிடையில், தனது கட்சிக்காரருக்கு மருத்துவ உதவி தேவை என சசிகரனின் சட்டத்தரணி கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்