புகாரளிப்பதால் சிக்கலுக்குள்ளாகும் பெண்கள்: இலங்கை தமிழ்ப்பெண் வழக்கு குறித்து குடும்ப வன்முறை நிபுணர்!

Report Print Balamanuvelan in கனடா

குடும்ப வன்முறை குறித்து பொலிசாரிடம் புகாரளிக்கும் பெண்களின் பிரச்னை, மேலும் அதிகமாகிவிடுகிறது என்கிறார் குடும்ப வன்முறை நிபுணர் ஒருவர்.

இலங்கை தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகன்னாதன் (27) ரொரன்றோவில் முன்னாள் கணவரால் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தெற்காசிய பெண்கள் மையத்தின் இயக்குனரான க்ரிபா சேகரிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நமது சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்து நாம் நேர்மையாக இருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன், அதுவும் நமது சமுதாயத்திலுள்ள இளம் மணப்பெண்கள் குறித்து, என்று கூறும் க்ரிபா, புதுப்பெண்கள் மீதான வன்முறை மிக அதிக அளவில் காணப்படுகிறது என்கிறார்.

வீடியோவை காண

2015இல் திருமணமாகி, 2017இல்தான் கனடாவுக்கு கணவனுடன் வாழ வந்த 27 வயது தர்ஷிகா, மிகவும் மிக அதிகமாக பயந்ததால்தான் பொலிசாரிடம் சென்றிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

தனது உயிர் மீது பயம் ஏற்பட்டதால் மட்டுமே, அவர் பொலிசாரிடம் புகாரளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார், இல்லையென்றால் அவர் அதை செய்திருக்க மாட்டார், காரணம், அவர் அப்படி செய்தால், அவரது திருமணம் பாதிக்கப்படும் என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்கிறார் க்ரிபா.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள தனபாலசிங்கம் மீது ஏற்கனவே 2017ஆம் ஆண்டு, மார்ச் மாதம், தர்ஷிகாவை தாக்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இனி மனைவியை தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 2017ஆம் ஆண்டு மே மாதம் தனபாலசிங்கம் விடுவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் விதித்த தடையை அவர் மீறியதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு மனைவியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி மாதம் தர்ஷிகாவின் அருகில் கூட செல்லக்கூடாது என்று தனபாலசிங்கத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது தர்ஷிகாவை கொலை செய்துவிட்டு பொலிசாரிடம் தனபாலசிங்கம் சரணைடையும் நேரம் வரையிலும் அந்த தடை உத்தரவு அமுலில்தான் உள்ளது.

ஆனால், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஒரு பெண்ணின் உயிர் இன்னும் அதிக ஆபத்துக்குள்ளாக்கப்படுகிறது என்கிறார் க்ரிபா.

தெற்காசியாவில் பெரும்பாலான, குடும்பங்களால் ஒழுங்கு செய்யப்படும் திருமணங்களில் (அதாவது காதல் திருமணங்கள் அல்லாத திருமணங்களில்), கணவனுக்கு வரதட்சணையாக நகையும் பணமும் கொடுக்கும் (மணமகன் வீட்டார் வற்புறுத்திக் கேட்டு வாங்கும்) ஒரு வழக்கம் உள்ளது.

சில நேரங்களில், கணவனுடன் இணைந்து கொள்வதற்காக கனடாவுக்கு மனைவி வருவதுகூட, ஒரு பாக்கியமாக கருதப்படுகிறது.

ஒரு பெண் பொலிசாரிடம் புகாரளித்துவிட்டு வீடுதிரும்பினால், அவள் பின்விளைவுகளை சந்தித்துதான் ஆகவேண்டும்.

இப்போது அவளது உயிர் ஆபத்தில் இருக்கிறது, அவள குடும்பத்தை அவமானத்திற்குள்ளாக்கிவிட்டாள், அவள் கணவனை அவமதித்துவிட்டாள் என்று விளக்குகிறார் க்ரிபா.

அதனால், தங்களிடம் ஆலோசனைக்கு வரும் பெண்களில், வெறும் 10 சதவிகிதத்தினர் மட்டுமே கண்வனை பிரிவது என முடிவெடுகிறார்கள் என்கிறார் க்ரிபா.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்