கனடாவில் தர்ஷிகாவுக்காக குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள்: கண்கலங்க வைக்கும் வார்த்தைகள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் முன்னாள் கணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட தர்ஷிகாவின் இரவு அஞ்சலி கூட்டம் நேற்று நடந்துள்ளது.

குறித்த நிகழ்வில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளூர் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

கொடுமைக்கார கணவனில் இருந்து பிரிந்து ஒரு புதிய வாழ்க்கை துவங்க முடிவு செய்த நிலையிலேயே 27 வயதான தர்ஷிகா ஜெகன்னாதன் தமது முன்னாள் கணவரால் வாள்வெட்டுக்கு பலியானார்.

Highland Creek Community Park-ல் ஒன்றிணைந்த தமிழ் சமூகம் தர்ஷிகா குறித்து நினைவு கூர்ந்ததுள்ளனர்.

பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என கூறியுள்ள கஜானி வேலாயுதம், தர்ஷிகாவின் இழப்பு எங்கள் அனைவரையும் பாதித்துள்ளது என்றார்.

அவரது வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என ஒருபோதும் கருதியது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவு அஞ்சலி கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ள வேலாயுதம், தற்போது தர்ஷிகாவின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க தேவையான நிதியை பொதுமக்களிடம் இருந்து திரட்டி வருவதாகவும், அந்த பணத்தில் தர்ஷிகாவின் பெற்றோருக்கும் உதவ இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தர்ஷிகாவுக்கு நேர்ந்த இந்த கொடுமை, அதிகம் பேசப்பட வேண்டும் எனவும், இதுபோன்ற ஒரு கொடூரம் எந்த பெண்ணுக்கும் எதிர்காலத்தில் நேர்ந்துவிடக் கூடாது என அந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட சின்சியா பிரான்சிஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

குணத்தில் சிறந்து விளங்கிய தர்ஷிகா இதுவரை சரியான பாதையிலேயே சென்றுள்ளார். ஆனால் அவருக்கு நேர்ந்தது உண்மையில் ஒட்டுமொத்த சமூகமும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று என சின்சியா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 11 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மாலை 6.15 மணியளவில் தர்ஷிகா தமது முன்னாள் கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு, அந்த வாள்வெட்டு காயங்களால் அவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்