கனடாவில் காவல்துறை தலைமையகத்தில் உயிரை மாய்த்து கொண்ட அதிகாரி.. வெளியான பின்னணி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காவல்துறை தலைமையகத்தில் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தலைநகர் ஒட்டவாவில் தான் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.

43 வயதான காவல் துறை அதிகாரி ஒருவரே காவல்துறை தலைமையகத்தில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

இந்த மரணம் சந்தேகப்படும் வகையில் இல்லை என ஒட்டவா பொலிசார் டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையில் உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு அதிகாரியை இழந்து வாடும் அவர் குடும்பத்தாரின் தனி உரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் பெயர் வெளியிடப்படாத நிலையில் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்