15 சதவிகித கனேடிய மாணவிகளுக்கு சக மாணவர்களால் பிரச்சினை: ஆய்வு!

Report Print Balamanuvelan in கனடா

15 சதவிகித கனேடிய மாணவிகள், சக மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக, ஆய்வு ஒன்றின் முடிவுகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன.

பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, கனடா முழுவதிலும், 14 முதல் 21 வயதுக்குட்பட்ட, 4000 மாணவர்களிடம் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், பள்ளியில் அவர்கள் அனுபவிக்கும் துன்புறுத்தல்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.

அவர்களில் 15 சதவிகித மாணவிகள் தாங்கள் ஏதேனும் ஒருவிதத்தில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

அதாவது, 20 மாணவிகள் படிக்கும் ஒரு வகுப்பில் மூன்று மாணவிகள், தான் மாணவன் ஒருவனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Lindsay Bird/CBC

அதே நேரத்தில் 9 சதவிகித மாணவர்களும் தாங்களும் சக மாணவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த செய்தி பெற்றோர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இவ்வளவுக்குப்பிறகும் பள்ளிகளில் இந்த பாலியல் தாக்குதல்களை தடுப்பதற்கு சரியான செயல் முறைகள் எதுவும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாக உள்ளது.

Lindsay Bird/CBC

Caitlin Taylor/CBC

Lindsay Bird/CBC

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்