தமிழ்ச்சிறுவன் காணாமல் போனதாக அறிவிப்பு வெளியிட்ட பொலிசார்! புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன தமிழ்ச்சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டிருந்த அறிக்கையில் அஸ்வின் யோகநாதன் என்ற 13 வயது சிறுவன் கடைசியாக பிப்ரவரி 10ஆம் திகதி மாலை உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு Bellamy Rd + Lawrence Ave E பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

5அடி 8 அங்குலம் உயரம் கொண்ட அஸ்வின் யோகநாதன் ஆரஞ்சு நிற பேண்ட், ஊதா நிற சட்டை அணிந்திருந்ததாக பொலிசார் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அஸ்வின் யோகநாதன் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக பொலிசார் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிறுவனை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றி எனவும் பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers