இரண்டு பாண்டா கரடிகளை சீனாவுக்கு திருப்பி அனுப்பும் கனடா!

Report Print Balamanuvelan in கனடா

சீனாவிலிருந்து பத்தாண்டுகள் ஒப்பந்தம் ஒன்றின்படி பெறப்பட்ட பாண்டா கரடிகள் இரண்டை கனடா சீனாவுக்கே திருப்ப அனுப்ப உள்ளது.

Er Shun மற்றும் Da Mao என்று பெயரிடப்பட்ட அந்த இரண்டு பாண்டா கரடிகளும் 2014 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து கனடாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அவை தற்போது கால்கரி விலங்கியல் பூங்காவில் உள்ளன.

இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் ஒன்றின்படி அவை இரண்டும் 2023 வரை கனடாவிலிருக்கவேண்டும்.

பாண்டா கரடிகள் மூங்கிலை மட்டுமே உண்ணக்கூடியவை. இதுவரை அவற்றிற்கான மூங்கில் சீனாவிலிருந்து விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டு வந்தது.

ஆனால், கொரோனாவால் சீனாவிலிருந்து மூங்கில் இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து மூங்கில் வழக்கமாக விமானங்களில் கொண்டுவரப்படும்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால், சீனாவிலிருந்து மூங்கில் கொண்டுவர இயலாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

சீனாவிலோ மூங்கில் ஏராளம் உண்டு என்பதால், கரடிகளின் நலன் கருதி அவை மீண்டும் சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்