அமெரிக்காவின் திடீர் செயலுக்கு தக்க பதிலடி கொடுத்த கனடா! ஜஸ்ட்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பு

Report Print Santhan in கனடா

அமெரிக்கா, சீனாவிற்கு இடையே இருக்கும் பிரச்சனை இப்போது சர்வதேச அளவில் பெரிய பிரச்சனையாக உருமாறிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து 2018-ம் சீனாவில் இருந்து, அமெரிக்கா இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது வரி விதித்தது அமெரிக்கா.

இதனால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது.

இதையடுத்து அமெரிக்கா வரியை அதிகரிக்க, அதற்கு பதிலடியாக சீனா வரியை அதிகரிக்க என வர்த்தகப் பிரச்சனை காலப்போக்கில் ஒரு வர்த்தக போராகவே மாறிவிட்டது. இன்று வரை இதற்கு ஒரு சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், தற்போது கனடா உடன் இன்னொரு வர்த்தகப் பிரச்சனையைத் தொடங்கி இருக்கிறது அமெரிக்கா. கனடாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் கனடா நாட்டின் சில அலுமினியப் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

குறித்த வரி, கனடா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் raw aluminum மற்றும் un-alloyed aluminum போன்றவைகளுக்கு தான் பொருந்தும் எனவும் downstream aluminum போன்றவைகளுக்கு எல்லாம் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே கனடா போராடி வரும் நிலையில், அமெரிக்காவில் திடீர் இந்த கூடுதல் வரி விதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அமெரிக்கா தொடர்ந்து இது போல உலக நாடுகள் பலவற்றுடன் பகையை வளர்த்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது என அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வட அமெரிக்க பொருளாதார ஒப்பந்தத்தை மீறி டிரம்ப் அரசு செயல்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடையே போடப்பட்டது. அமெரிக்கா தன்னை அமெரிக்க நாடுகளில் பெரிய நாடாக காட்டிக்கொள்ள இவ்வாறு செய்கிறது என கனடா குற்றம் சாட்டுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்