கனடாவின் ரொரன்ரோவில் நள்ளிரவு 12.30 மணிக்கு காணாமல் போன பெண்! அவர் குறித்து வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் நள்ளிரவில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.

இது குறித்த தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி Earim Asghar என்ற 36 வயது பெண் கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு கடைசியாக காணப்பட்டார். Broadview Av and Dundas St East பகுதியில் தான் அவர் காணப்பட்டிருக்கிறார்.

5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட Earim Asghar பருமனான உடல்வாகு கொண்டவர் என கூறப்பட்டுள்ளது.

காணாமல் போன போது நீல நிறத்திலான உடையை Earim Asgha அணிந்திருந்தார்.

அவர் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்