பதின்ம வயது பெண்ணை கொலை செய்த இளம்பெண்: சமூக ஊடகங்களில் உலவும் தகவல்கள்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் 13 வயது பெண் ஒருவரை கொலை செய்ததாக மற்றொரு பதின்மவயது பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் எந்த தகவல்களையும் வெளியிட மறுத்துள்ளனர்.

ஆனால், சமூக ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.

வெள்ளியன்று இரவு 11 மணியளவில் எட்மண்டனில் உள்ள சாலை ஒன்றில் 13 வயது பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அங்கு Sierra Chalifoux-Thompson (13) என்ற இளம்பெண் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.

உடனே முதலுதவி அளித்துவிட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து மற்றொரு பதின்ம வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர், வயது மற்றும் தாக்கியதற்கான நோக்கம் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.

ஆனால் பேஸ்புக்கில் பொலிசார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியின் கீழ் கமெண்ட் செய்துள்ள ஒரு பெண், ஒரு 14 வயது பெண் தான் இந்த கொலையை செய்ததாகவும், உண்மையில் விளையாட்டாக அவர் Sierraவை குத்தியதாகவும், தவறுதலாக குத்தப்பட்ட அந்த பொருள் ஆழமாக சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சம்பவம் நடந்த உடன் யாரும் அவசர உதவியை அழைக்கவில்லை என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணத்தை அறிவதற்காக Sierraவின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தில் மட்டுமல்லாது எட்மண்டன் பகுதி முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்