கனடாவில் காணாமல் போன அழகிய இளம்பெண்! பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்... புகைப்படத்துடன் பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா
337Shares

கனடாவில் அழகிய இளம் பெண் காணாமல் போனதை சந்தேகத்திற்குரியதாக கருதும் பொலிசார் அது தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

Edmonton-ஐ சேர்ந்த Billie Wynell Johnson என்ற 30 வயது இளம்பெண் கடந்த மாதம் 24ஆம் திகதி 113 Street and 107 Avenueவில் கடைசியாக காணப்பட்டார்.

இதன் பின்னர் அவர் மாயமானதாக கடந்த 28ஆம் திகதி அதிகாரபூர்வமாக புகார் அளிக்கப்பட்டது.

5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவராக Billie இருப்பார் என பொலிசார் கூறியுள்ளார். தனது இடது தோள்பட்டை அருகில் பூக்களை டாட்டூவாக அவர் குத்தியிருப்பார்.

Billie காணாமல் போனதில் மர்மம் இருப்பதாக கருதும் பொலிசார் அதை சந்தேகத்துக்குரியதாக பார்க்கிறார்கள்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்