10 நாட்களில் 9 பேரை பலிகொண்ட அதிவேக கொரோனா தொற்று: கனடா நகரமொன்றில் பரபரப்பு

Report Print Balamanuvelan in கனடா
309Shares

கனடா நகரமொன்றில் 110 பேருக்கு பரவிய அதிவேக கொரோனா தொற்று ஒன்று, 10 நாட்களில் 9 பேரை பலிகொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள Barrie நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில், ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை பார்க்கும்போது, அங்கு 110 பேருக்கு கொரோனா தொற்றியிருந்ததோடு 10 நாட்களுக்குள் 9 பேர் உயிரிழந்தும் இருந்தனர்.

வழக்கமான கொரோனா பரவலைவிட இது அதிவேகமான பரவலாக இருந்தது என்கிறார் Dr. Charles Gardner என்னும் மருத்துவ அலுவலர்.

இப்படி அந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதால், அது ஒரு வேளை பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள திடீர்மாற்றம் பெற்ற வகை கொரோனா வைரஸாக இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, Barrie முதியோர் இல்லத்தில் பரவிய அந்த அதிவேக கொரோனா வைரஸ் பிரித்தானிய வகை வைரஸா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Dr. Charles Gardner தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வகை திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் 50 சதவிகிதம் அதிகம பரவக்கூடியது என நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்