பிரபல மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை! கனடாவில் வசிப்பவரை சென்னை திரும்ப உத்தரவு

Report Print Raju Raju in கனடா
1601Shares

பிரபல மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வரும் நிலையில் கனடாவில் உள்ள அவரை ஊர் திரும்ப வருமான வரிதுறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் மத நிகழ்ச்சிகளை நடத்திவரும் பிரபல கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமாக சென்னை, கோவை ஆகிய இடங்களில் உள்ள வீடு, இல்லங்களில் வருமான வரித் துறையினர் நேற்று கடந்த 20ஆம் திகதி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பால் தினகரன் மீதான வருமான வரி ஏய்ப்பு, வெளிநாட்டு முதலீட்டில் விதிமீறல்கள் ஆகிய புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட இடங்கள், கோவையில் உள்ள பால் தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி என மொத்தம் 28 இடங்களில் இரண்டாவது நாளாக நேற்று நள்ளிரவு வரை இச்சோதனை நடைபெற்றது.

மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து வரும் இந்த அதிரடி சோதனையில் 'இயேசு அழைக்கிறார் அறக்கட்டளை'க்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொடர்பான ஆவணங்கள், கனடா உள்ளிட்ட வெளிநாட்டுகளில் பால் தினகரன் முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்டவை சிக்கியதாக தெரிகிறது.

இந்த ஆவணங்கள் தொடர்பாக பால் தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் நேரில் விசாரிக்க ஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, தற்போது கனடாவில் வசித்துவரும் பால் தினகரன் மற்றும் அவரின் குடும்பத்தினரை விசாரணைக்காக சென்னைக்கு வரும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்