இந்திய அரசிடம் உதவி கேட்டீர்களா? இந்திய வம்சாவளி அமைச்சரை கேள்வி கேட்ட கனேடிய எதிர்க்கட்சி உறுப்பினர்

Report Print Balamanuvelan in கனடா
0Shares

கனேடிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்திய வம்சாவளியினரான கனேடிய அமைச்சர் ஒருவரிடம், கொரோனா தடுப்பூசிகளுக்காக இந்தியாவை தொடர்பு கொள்ள வலியுறுத்திய சுவையான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

Michelle Rempel Garner என்னும் கனேடிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், ட்ரூடோ அமைச்சரவையில் அமைச்சராக உள்ள இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்திடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கொரோனா தடுப்பூசிகளுக்காக கனடா உதவி கோரியதா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு முதலில் அனிதா ஆனந்த் சரியான பதில் கூறவில்லை. ஆனாலும் விடாத Michelle, நீங்கள் பிரதமர் மோடியிடம் பேசினீர்களா என்று கேட்கிறார்.

அதற்கு அனிதா இல்லை என்கிறார். ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

அதற்குப்பின் மீண்டும் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள Michelle, இந்த உரையாடலுக்குப் பின், ட்ரூடோ நரேந்திர மோடியிடம் பேசியிருக்கிறார், இந்திய அரசுக்கு நன்றி என்று கூறிவிட்டு, பரவாயில்லை எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்தான் செய்கிறது என்று கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் மோடியும், கனடாவுக்கு தடுப்பூசி விடயத்தில் உதவுவதாக கனேடிய பிரதமர் ட்ரூடோவிடம் வாக்களித்திருக்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்