கோவிட்-19 தொற்றுநோயால் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை இப்போது மார்ச் 21-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணத் தடை பிப்ரவரி 21-ஆம் திகதி வரை அறிவித்திருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக இப்பொது மேலும் ஒரு மாதத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்படி 11-வது முறை தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமேரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தகம் போன்ற அனைத்து அத்தியாவசிய பயணங்களும் வழக்கம் போல் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கனடா கடந்த பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் அனைத்து பயணிகளுக்கும் புதிய, கடுமையான சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.