கனடாவில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த மூன்று லாட்ஜ்கள்: பெட்ரோல் கேனுடன் சிக்கிய நபர்

Report Print Balamanuvelan in கனடா
0Shares

கனடாவில் மூன்று லாட்ஜ்கள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த நிலையில், சம்பவ இடத்தில் பெட்ரோல் கேனுடன் ஒருவர் சிக்கியுள்ளார்.

கனடாவின் வான்கூவர் பகுதியிலுள்ள லாட்ஜ் ஒன்றில், நேற்று அதிகாலை 6.45 மணிக்கு தீப்பற்றியுள்ளது.

சிறிது நேரத்திற்குள், அதாவது 7 மணி ஆவதற்குள், சற்று தொலைவிலுள்ள மற்றொரு லாட்ஜில் தீப்பிடித்துள்ளது.

சுமார் 7.30க்கு அதே பகுதியிலுள்ள மூன்றாவது லாட்ஜ் ஒன்றில் தீப்பற்றியுள்ளது.

அப்போது அந்தவழியாக வந்த பணியில் இல்லாத பொலிசார் ஒருவர், தீப்பிடித்து எரியும் இடத்திலிருந்து ஒருவர் பெட்ரோல் கேன் போன்ற ஒரு கேனுடன் செல்வதைக் கவனித்துள்ளார்.

அவரை அந்த பொலிசார் தடுத்து நிறுத்தி விசாரிக்க, அவரிடம் சண்டையிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் அந்த நபர். என்றாலும். காலை 10 மணிக்கு முன் அந்த 42 வயதுள்ள நபரை பொலிசார் தேடிப்பிடித்து கைது செய்துவிட்டார்கள்.

அந்த நபர் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளவர் என பொலிசார் தெரிவித்தாலும், இதுவரை அவர் தீவைப்பு சம்பவம் எதிலும் சிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்