கத்தியுடன் நின்ற வெளிநாட்டவரை சுட்டுக்கொன்ற பொலிசார்: குற்றம் சாட்டும் குடும்பத்தினர்

Report Print Balamanuvelan in கனடா
0Shares

கனடாவில் கத்தியுடன் நின்ற பாகிஸ்தானியர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்ற நிலையில், அவரது குடும்பத்தினரோ தாங்கள் உதவிதான் கோரியதாகவும், ஆனால், உதவுவதற்கு பதில் பொலிசார் துப்பாக்கிகளுடன் நுழைந்து தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

ஒன்ராறியோவின் Peel பகுதியில் வசித்துவந்த Ejaz Choudry (62) schizophrenia பிரச்சினை கொண்டவர்.

ஒரு நாள் மாலை 5 மணியளவில், இதய பிரச்சினை, நீரிழிவு மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் கொண்டவரான Ejazக்கு உதவி தேவை என்று கூறி அவசர உதவியை அழைத்துள்ளார் அவரது மகள்.

அப்போது அங்கு மருத்துவ உதவிக்குழுவினருடன் வந்த பொலிசார், அவரது மகள் உதவியுடன் அவரிடம் பேச முயன்றுள்ளார்கள்.

ஆனால், Ejaz அவர்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு கூறியிருக்கிறார். ஆகவே, அவரது மகளையும் அழைத்துக்கொண்டு 5.30 மணியளவில் வீட்டுக்குள் செல்ல, பெரிய கத்தி ஒன்றை எடுத்துக்காட்டி வெளியே போகச் சொல்லியிருக்கிறார் Ejaz. வெகு நேரமாக அவரிடம் பேசி அவரை வெளியே வருமாறு அழைத்தும் Ejaz வர மறுத்துள்ளார்.

8 மணிக்கு மேல் Ejaz யாருடனும் பேச மறுத்துவிட, 8.25 மணிக்கு பொலிசார் ஏணி மூலம் ஏறி பால்கனிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.

பொலிசாரைக் கண்டதும் Ejaz கத்தியுடன் அவர்களை நெருங்க, பொலிசார் அவரை சுட்டிருக்கிறார்கள்.

பின்னர் பொலிசார் அவர் கையிலிருந்த கத்தியைத் தட்டிவிட, அவசர உதவிக்குழுவினர் உடனடியாக அவரைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால், 8.38க்கு அவர் உயிரிழந்துள்ளார்.

கனடா பாதுகாப்பான நாடு என்று எண்ணி இங்கு வந்தோம், ஆனால், இங்கே சொந்த வீட்டிலேயே எங்கள் சகோதரர் கொல்லப்பட்டுவிட்டார் என்கிறார் Ejazஇன் சகோதரர்.

ஆனால், விசாரணை அமைப்பு ஒன்று, அந்த சூழலில் பொலிசார் செய்தது சரிதான் என்று கூறிவிட, தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்த Ejazஇன் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்