சிங்கம் பட ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்

Report Print Fathima Fathima in சினிமா
375Shares

சிங்கம், சாமி 2 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரியன் மாரடைப்பால் இன்று காலமானார்.

விருதுநகரை பூர்விகமாக கொண்ட 55 வயதாகும் ப்ரியன் இன்று திடீரென மாரடைப்பால் காலமானர்.

திரையுலக ஜாம்பவான் பாலு மகேந்திராவிடம் கலைப்பயணத்தை ஆரம்பித்த ப்ரியன், இயக்குனர் ஹரியின் நெருங்கிய நண்பராவார்.

ஹரியின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இவர், தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் துணை அதிபராகவும் பதவி வகித்து வருகிறார்.

சென்னை கே.கே.நகரில் வசித்து வரும் ப்ரியன் வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார், அந்த வீட்டிற்காக வாசல் கதவு அமைக்கும் நிகழ்வு இன்று நடந்தது.

விழா முடிந்து வீடு திரும்பிய ப்ரியன் நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில், உயிர் பிரிந்தது.

இவரது இறுதி சடங்குகள் நாளை விருதுநகரில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்