நல்லூரில் கோலாகலமாக இடம்பெற்ற சப்பரத்திருவிழா! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

Report Print Murali Murali in சமூகம்
208Shares
208Shares
lankasrimarket.com

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 23ஆம் நாள் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நல்லூர் கந்தன் வள்ளி, தெய்வயானை சமேதராய் வெளி வீதியுலா வந்தார்.

கோபுரத்தை ஒத்த மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மங்கள வாத்திய முழக்கத்துடன் ஆலயத்தின் வெளிவீதியில் நல்லைக் கந்தனின் சப்பரத்திருவிழா நடைபெற்றது.

சப்பரத் திருவிழாவில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 16 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்நிலையில், நாளொரு அழகுபெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்